ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் பல ஜனாதிபதித் தேர்தலில் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
முதலில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவியுங்கள் அதன் பிறகு கூட்டணி குறித்து தீர்மானிப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய தொழிலாளர் கட்சியின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியொன்றை அமைப்பதற்கு முன்னர் அக்கட்சிக்குள் உள்ள உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள பெரும்பான்மை கடும்போக்கு கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
புதிய கூட்டணியின் யாப்பு தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர், தமது பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.