கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கவிஞர் தேன்மொழிதாஸ் தற்போது நலம் பெற்று வருவதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளராக பணிபுரிந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் 50-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் இண்ஸ்டியூட்’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சிறுநீரகப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி, இவரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே தனியாக வசித்து வந்தார் தேன்மொழி தாஸ்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான கவிஞர் தேன்மொழிதாஸ் பற்றிய செய்தி அறிந்து மிகுந்த கவலையில் இருந்த சமயத்தில் அவருடன் தகவல் வழியாக உரையாடியதாகவும் தாம் விரைவில் நலமடைந்துவிடுவேன் எனக் நம்பிக்கையுடன் தேன்மொழிதாஸ் பேசியதாகவும் தீபச்செல்வன் கூறியுள்ளார்.
இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட தேன்மொழி தாஸ், கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் இவர் எழுதிய பாடல்கள்.