ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் நெகிழ்ச்சியான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பொதுசன இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள பாடகரும் அறிவிப்பாளருமான ரங்கானா செனிவிரத்ன பாடலை பாடுவதற்கு முன் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கத்தில் இருந்து ஒரு பகுதியை படித்துள்ளார்.
இது குறித்து தீபச்செல்வன் குறிப்பிடுகையில், “தமிழ் சூழலில் இப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்று தெரியவில்லை. சிங்கள இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கத்தின் ஒரு பகுதியைப் படித்து பாடலை பாடுகிறார் ஒரு சிங்களப் பாடகர். சிங்கள மக்களும் மாணவர்களும் திரண்டிருக்கும் ஒரு இசை நிகழ்வில் ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து விடுதலைப் புலி மாவீரனை இழந்த தாயின் வலியை பகிரும் நெகிழ்வான சம்பவம் தென்னிலங்கையில் நடந்திருக்கிறது. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இதனை சாத்தியப்படுத்திய எழுத்தாளர் ஜீ. ஜீ. சரத் ஆனந்தாவுக்கு பேரன்பு…” என்று தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலை சார்ந்தும் மாவீரர்கள் சார்ந்தும் எழுதப்பட்ட நடுகல் நாவலுக்கு இவ்வாறு தென்னிலங்கையில் வழங்கப்பட்ட நெகிழ்வான வரவேற்பு கண்டு தமிழ் உணர்வாளர்கள் தீபச்செல்வனை பாராட்டி வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]