Tesla நிறுவனத்தின் தானியங்கி கார்களின் சிறப்பம்சங்கள் இதோ!
கார் வடிவமைப்பில் அண்மைக் காலமாக பிரபலமாக பேசப்பட்டு வருவது தானியங்கி முறை மூலம் இயங்கும் கார்கள்தான்.
இவ் வகைக் கார்களை வடிவமைப்பதில் கூகுள் உட்பட சில முன்னணி நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வந்தன.
இவற்றுள் அமெரிக்காவிலுள்ள Tesla Motors நிறுவனமும் ஒன்றாகும்.
தற்போது இந்நிறுவனம் மட்டுமே குறித்த வகை கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள தமது தானியங்கி கார் தொடர்பில் விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றினை அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவ் வீடியோவை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Elon Musk என்பவர் வெளியிட்டுள்ளார்.
எந்த விதமான மனித தலையீடுகளும் இன்றி முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இக் கார் தானாக பார்க்கிங் ஆவது முதல் முழுமையான இயக்கத்தினை எடுத்துக்காட்டுவதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.