பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையினர் நடாத்தும் ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு “ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம்” என்ற தொனிப்பொருளில் இணைய வழியாக நடைபெறவுள்ளது.தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் தலைமையில் 15.12.2021 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டிற்குப் பிரதம அதிதியாக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்சயும், சிறப்பு விருந்தினராகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் பிரபாத் ஏக்கநாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டின் ஆதார சுருதி உரையினை நாடகவியற் பேராசிரியரும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மேனாள் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. மௌனகுரு ”பிரதி தரும் இன்பம் – இலங்கைத் தமிழ் நாடகமும் நாடக இலக்கியமும்” என்ற தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். இம்மாநாட்டு
ஒருங்கிணைப்பாளர்களாகச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன், விரிவுரையாளர் யாழினி சதீஸ் செயற்பட்டுள்ளனர்.
இம்மாநாட்டின் முதலாவது அமர்வு சுவாமி விபுலானந்த அடிகள் அரங்காக நடைபெறவுள்ளது. இவ் அரங்கிற்கு இந்தியாவைச் சேர்ந்த அரங்கச் செயற்பாட்டாளர் எழுத்தாளர் வெளி ரங்கராஜன் தலைமை தாங்கவுள்ளார்.
பண்பாட்டு எதிர்ப்பார்ப்பாக அரங்கப் பனுவல்கள் -பிக்காலனிய இலங்கைத் தமிழ் நாடகங்களை மீள வாசித்தல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நவதர்ஷினி கருணாகரன்,
எழுத்து பனுவல் மைய ஆற்றுகை ஆரொடு நோகேன் நாடக நெறியாள்கையுடனான பங்குகொள் ஆய்வு என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சு. சந்திரகுமார், ஈழத்துக் கத்தோலிக்க நாடகமரபில் ஞானசௌந்தரி ஆசிரிய ஆலோசகர் , யோண்சன் ராஜ்குமார், அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நாடகபாடப் பிரதிகள் என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் கு. சின்னப்பன்,மலையகச் சமூகமாற்றத்தில் சமூக நாடக பாடப் பிரதிகளின் வகிபாகம் என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இ.மகேஸ்வரனும் ஆய்வுகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர். இவ் அமர்வின் மதிப்பீட்டாளராகப் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் உரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டின் இரண்டாவது அமர்வு வண கிங்ஸ்பரி தேசிகர் அரங்காக நடைபெறவுள்ளது. இவ் அரங்கிற்கு அரங்கத் தலைவராக இந்திய எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் கலந்துகொள்ளவுள்ளார். ஈழத்து நாட்டிய நாடகப் பிரதியில் இசை மரபும் மாற்றமும் என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக இ.சைத்துறை சிரேஷட விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன், கலாசார அரசில் நோக்கில் மண் சுமந்த மேனியர் நாடகப்பரதி என்ற தலைப்பில் சப்ரகமவ சிரேஷ்ட விரிவுரையாளர் தேவ குமாரி சுந்தர்ராஜன், கிறிஸ்தவ அறிவியல் நோக்கலி் லூயிஸ் டெசின் நானே குற்றவாளி யாழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மேரி விரீபிரிடா சுரோந்திர ராஜ், பூதத்தம்பி நாடக்பிரதியின் மீள்புனைவின் அரசியலும் என்ற தலைப்பில் ஜெகன் தவராஜ ஆய்வுகளை சமர்பிக்கவுள்ளனர்.இவ் அமர்வின் மதிப்பாட்டாளராக பேராசிரியர் துரை மனோகரன் உரையாற்றவுள்ளார்.
மூன்றாவத அமர்வு பேராசரியர் க. கணபதிபிள்ளை அரங்கு வெகுஜன தொடர்பாடலில் வானொலி நாடகம் வி. விமலாதித்தன், சோமசுந்தர புலவரின் உயிரிளங்குமரன் நாடகம் ஓர் ஆய்வு நோக்கு யாழ் விரேஷட விரிவுரையாளர்,ஈ. குமரன், இறையியல் நோக்கில் திருபாடுகளின் காட்சி யாழ் உதவி விரிவரையாளர் நீ மரிய நிறோமினி, மாகாகவியின் மேடை பா நாடகங்கள் – உதவிவிரிவரையாளர் பொ. மருதூரிய ஆய்வுகளை சமர்பிக்கவுள்ளனர். இவ் அமர்வின் மதிப்பாட்டாளராக பேராசிரியர் வ. மகேஸ்வரன் உரையாற்றவுள்ளார்.
நான்காவது அமர்வு பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு அரங்கு தலைவராக திரு பிரளயன் கலந்து கொள்ளவுள்ளார். மிருச்சசடிகம் ஈழத்து மொழிபெயரப்புகள் என்ற தலைப்பில் ச. பத்மநாதன், கந்தன் கருணை நாடக பிரதியில் சமூக பாடுபாடு ஹைதராபாத் பல்கலைக்கழக அருந்தவநாதன் பிரசாந்,அரசியல் நோக்கில் அபசுரம் நாடக பிரதி கிழக்குப் பல்கலைக்கழக வி. கிருபானந்தம், உடக்குப் பாஸ்கா நாடக இலக்கிம் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகியற்கற்கை விரிவுரையாளர் அ. விமல்ராஜ் ஆகியோர் ஆய்வுகளை சமர்ப்பிக்கவுள்ளனர் இவ் அமர்வின் மதிப்பாட்டாளராக கலாநிதி சோதிமலர் இரவீந்ரன் உரையாற்றவுள்ளார்.
ஐந்தாவது அமர்வு பேராசிரியர் க. சிவதம்பி அரங்கில் அரங்கத் தலைவராக மனைவர் சி. பார்தீப ராஜ கலந்தக்கொள்வுள்ளார். கண்ணாடி வாரப்புகள் நாடக பிரதியை மொழிபெயர்த்தல் என்ற தலைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவன வேிரிவுரையாளர் துளசிவந்தனா உதயசங்கர், மலையக சமூதாயக் கட்டமைப்பும் காமன் கூத்தும் என்ற தலைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக இந்தநாகரீகத்துறை விரிவுரையாளர் சோ.இந்துஜானி, திறனாய்வு நோக்கில் இராவணேசன் நாடகப பனுவல் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன், மண்சுமந்த மேனியர் நாடகப் பிரதியில் போர்க்கால வாழ்வியல் வைதேசி செல்மர் எமில், நீலவாணன் நாடகங்கள் ஓர் ஆய்வு கவிதாஞ்சனன் ஆகியோர் ஆய்வுகளை சமர்ப்பிக்வுள்ளனர். இவ் அமர்வின் மதிப்பாட்டாளராக முன்னாள் விபுலாநந்த அழகியற்கற்கை நிறுவன பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் உரையாற்றவுள்ளார்.
ஆறாவது அமர்வு வித்துவான் க. சொக்கலிங்கம் அரங்கில்அரங்கத் தவைராக பேராசிரியர் ஆர் ராஜீ கலந்துக்கொள்ளவுள்ளார். பெண்ணிலைவாத நோக்கில் கூத்துப்பிரதிமீளுருவாக்கம் கலாநிதி கலைமகள், பாடசாலை நாடகப் பிரதிகள் கலையரசி சஜந்தன், வேர்களும் விழுதுகளும் நாடகப் பிரதியில் புலம்பெயர்ந்தோர் வாழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தற்காலிக உதவ விரிவுரையாளர் ரா.கனகேஸ்வரி, மனந்தவம் நாடக எழுத்துருவும் பிரைக்கடின் நாடக அழகியலும் கலாநிதி ஷண்முக ஷர்மா ஜெயபிரகாஷ், சிறுவர் கூத்தரங்கும் கற்றல் சூழலும் கிழக்குப் பல்கலைக்கழகம் கலைக்கலாசாரபீட நுண்கலைத்துறை இறுதிவருட மாணவி இராஜேந்திரன் கலஷானா ஆகியோர் சமர்ப்பிக்வுள்ளனர் இவ் அமர்வின் மதிப்பாட்டாளராக பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பினை சிரேஷ்ட விரிவுரையாளர் செ. சுதர்சன் நிகழ்த்தவுள்ளதோடு வரவேற்புரையினை விரிவுரையாளர் யாழினி சதீஸ்வரன் நிகழ்த்தவுள்ளார்.