“ஸ்ரீலங்கா என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. சிங்கள மக்கள் வீதியில் கண்ணீருடனும் பசியுடனும் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இத் துயரம் கண்டு எம் நெஞ்சும் கவிகிறது…”
சமையல் எரிவாயுவிற்கும் வாகன எரிபொருளுக்கும் இலங்கை நாடே திண்டாடுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நெருப்பாய் விலை உயர்ந்துள்ள நிலையில் இலங்கைத் தீவு மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு முகம் கொடுக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக நாம் ஒரு தீவாக தற்போது இருப்பதனால் தமிழ் மக்களுக்கும் இந்தப் பாதிப்புக்கள் உண்டு. ஆனால் நாங்கள் விறகடுப்பையும் மொட்டைக்கருப்பன் அரிசியையும் வைத்திருக்கிறோம்.
உணவுத் தட்டுப்பாடுகளும் மருந்துத் தடைகளும் எரிபொருட் தடைகளும் எமக்குப் புதிதல்ல. இலங்கை அரசு எம்மீமு போரை கட்டவிழ்த்துவிட்ட தருணங்களில் எல்லாம் இத் தடைகளையும் கடந்து வாழ்வை போராட்டமாக சுமந்தோம்.
இன்று சிங்கள மக்கள் படுகின்ற வேதனை கண்டு நாம் அவர்களுக்காக வருந்துகிறோம். எனினும் இந்த அரசை நீங்கள்தான் உருவாக்கினீர்கள். இப்போதும் நீங்கள்தான் அதிகமாக முடிவு எடுக்க வேண்டிய பொறுப்புக்குரியவர்கள்.
எவருடைய துயரம் கண்டும் மகிழ்பவர்கள் நாங்கள் இல்லை. இலங்கை தீவின் பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டும் என்றும் சிங்கள மக்கள் சந்திக்கும் அவலங்கள் நீங்க வேண்டும் என்றும் நான் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்கிறேன்.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]