கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த சாந்தா பஞ்சலிங்கம் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார்.
கடந்த 31ஆம் திகதியுடன் பதவியில் இருந்து விடைபெற்ற தொழிலதிபர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் விடைபெறுதலும் புதிய நிர்வாகத் தெரிவும் கனடாவில் இடம்பெற்றது.
தனது தலைமைத்துவ உழைப்பினாலும் பலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பினாலும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு நிரந்தர கட்டடம் ஒன்றை இவர் பெற்றுக் கொடுத்தமை விசேட அம்சமாகும். இதன் தற்போதைய பெறுமதி 1.2 மில்லியன் டொடலர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இச் சம்மேளனத்தின் தலைவராக இவர் சிறப்பாக கடமையாற்றி வந்தார்.
தாயகத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்த நிலையில் புலம்பெயர்ந்து குடும்பத்தையும் தேசத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஓர்மத்துடன் உழைத்த சிறுசிறு தொழிலாளர்களை இனங்கண்டு அவர்களை மதிப்பளித்து ஊக்குவித்து பெரும் மாற்றங்களை கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தில் சிறந்த தலைமைத்துவத்தை இவர் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் சிறிய அளவில் தொழில் அதிபராக தனது பணியை தொடங்கிய சாந்தா பஞ்சலிங்கம் 2007இல் சம்மேளனத்தின் அங்கத்துவராக இணைந்து எக்சலன்ட் விருதுபெறப்பட்ட நிலையில் ஈற்றில் சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றி கனேடிய தமிழர் வர்க்க உறவுகளின் நலனுக்கா தன் மேலான பணிகளை வழங்கியமை மதிப்புக்குரிய அம்சமாகும்.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]