ROUGE RIVER தொகுதிக்கான இடைத்தேர்தல்! NDB கட்சி புதிய குற்றச்சாட்டு!

ROUGE RIVER தொகுதிக்கான இடைத்தேர்தல்! NDB கட்சி புதிய குற்றச்சாட்டு!

Scarborough-Rouge River தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னரே, ஆளும் லிபரல் கட்சியின் தேர்தல் பரப்புரை குழுவினர் தேர்தல் திகதியை வெளியிட்டுள்ளதாக புதிய சனநாயக கட்சி (New Democratic Party) குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை காலையில் ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு, குறித்த அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நடைபெறும் என தெரிவித்திருந்ததாக புதிய சனநாயகக் கட்சியின் தலைவி ஆன்ரியா ஹோர்வத் தெரிவித்துள்ளார்.

மேலும், லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் குறித்த அந்த அறிவிப்பின் பின்னரே, தேர்தல் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதாகவும் அத்துடன் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஒன்ராறியோ தேர்தல் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் குறித்த அந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைக்கு முற்றிலும் முரணானது என்றும், அதன் காரணமாகவே இது தொடர்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News