என் பள்ளியின் வீதியில்
சரிந்தது ஒரு முல்லை
ஊற்றுப் புலத்தின்
சனித்த பிள்ளை
உறங்காத் தெருவொன்றில்
நீளுறக்கமானது
காலையிலிருந்து
றபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதுவரை எந்தச் சாமியும்
எழுந்து வந்ததாயில்லை
நாளை மலரும் சின்னப்பூக்கள்
சிறகறுந்து நிழலாகிப் போகையில்
றபிக் றாமசாமி பற்றி
ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென
கொக்கரிக்கிறது இந்த ஏழைமனது
கிளைகள் பல விரித்து
நிலையாய் நித்தியங் காண்பவள்
சிலையாய்ச் சிதைந்து
கிளியின் வீதியில்
கிழிகையில் நீதி கள்ள மௌனமானது
நீதிச் சீருடை தரித்தோர்
கள்ளத் தவஞ் செய்தனர்
அன்று யானை நடந்த ஏனையினில்
இன்று எருமைகள் காவலாம்
ஆனதால் காலனும் நெடுகுவாம்
போரின் பின்னும் புரட்சியாளர்கள்
புன்னகைக்க வேண்டும்
இல்லையேல் நாளை மலரும் சின்னப் பூக்கள் யாதுமாவர்
சிறுக வான அவ்வீடு என்ன வாகும்
ஓ! றாம சாமியே எழுந்து வா
இன்றும் எந்நிலம் தீப் பூதங்களின் வாயில்
த. செல்வா