இளமையை ரசிக்கும் வயதில் வந்தான்
எமக்கொரு வஞ்சகன்
கனவிலே மூழ்கடித்தான் பலர் கனவுகளையும்
சாகடித்தன்
சற்றும் பொறுமையில்லை எமக்கு
சாதிக்கவும் துப்பில்லை
சாதித்தவன் தந்தான் கையில்
மூழ்கடித்தான் முத்தெடுக்க – இன்னும் தத்தளித்து தவிக்கின்றான்
வாழ்வில் விடியல் இல்லை-என்று
பலர் தூக்கத்தை தொலைத்தான் – பாவி
இரவும் பகலானது
கடிகார ஒலியும் காதிற்குள் விழும்வரை
விழித்திருப்போம் விசமியுடன்
தாலாட்டும் பால்நிலவும் ஜன்னலோரம்
பாவத்துடன் கடந்தது
சொந்தங்களும் பந்தங்களும் வலைகளில்
குழுக்களாகின
நேரில் பார்த்த சந்தோசமும் வலைகளில் சிக்கின
சீர்பட்ட சமூகமும் சீரழிந்தது
படுக்கையும் அதனுடன் பாசமானது
பார்ப்பவனும் பழகிபோனான்
பிடிப்பற்ற வாழ்வில்
பற்றியே பிடித்தது
அழுவதும் சிரிப்பதும் அவனாலானது
தொட்டு பேசவும் தொடுதிரையுமானது
அண்டம் முழுவதும் அரட்டையடிக்க
கற்றுக்கொடுத்த அறிவாளன்
ஒரே வீட்டில் ஒவ்வோராக பிரித்தான்
தூயவன்
துன்பத்தையும் காணொளியாக்கி
காட்டினான்- துரோகி
போற்றுவதற்குரிய பொழுதுகளையும்
போராடி வென்றான்- கயவன்
கண்திறந்தே தொலைத்தோம் காரணமில்லாமல்
எம் கனவுகளை
இறந்த கால நினைவுகளையும் ஒழித்து
நிகழ்கால பேரரசனானான்
எதிர்கால சூட்ச்சுமங்களுடன்- கைபேசி
களவாடிய பொழுதுகள் ஏராளம்.
கேசுதன்