இடைவிடா பெரும் துயர் காலம்
சுடடெரிக்கும் தோட்டா முனையில்
பல குடும்பங்கள்.
குடும்பத்தில் ஓர் தலைமகன் வேண்டுமென தத்தளிக்கும் நேரம்
கருவறையில் காரிருள் படிந்தது
சிலைமகனும் உயிர்பெறும் காலத்தில்
எம் உயிர் ஒன்று பறித்தவிக்க
கண்ணோரம் விழிநீர் சிந்தி பறிகொடுத்தோம்
நாற் சில்லின் பின்னே
இருசில்லின் ஓலம் போனது
எங்கேயோ பட்டது
எங்கே போனது
தெரியவில்லை
போராட்ட களத்தில் ஓர் பூகம்பம்
அன்னையரின் வயிற்றில்
தப்பித்து வருவாரோ என்ற எண்ணம் தொடர்கிறது கனவாய்….
எம் தலைமகனே
உனக்கு மாலையும் மஞ்சளும் சூடக்
காத்திருப்பதுவே எம் வாழ்வானது.
கேசுதன்