புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தாயக உறவுகளுடன் தமது அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டது கனடா திங்கள் நட்பு வட்டம்.
தாயக உறவுகளின் மனங்களை மகிழ்வால் நிரப்பி ஆறுதல் அளிக்கும் இப் பணியில் கனடா திங்கள் நட்பு வட்டத்தின் ஆதரவு என்றும் தொடரும் என்பதையும் இத் தருணத்தில் தெரியப்படுத்துகிறோம்.
தாயகத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள காந்தி சிறுவர் இல்லச் சிறுவர்களுடனும் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களுடனும் இவ்வாண்டின் புத்தாண்டு தினத்தை புலம்பெயர் தேசத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுவதில் மனஉவகை அடைகிறோம்.
எமது நிலத்தையும் உறவுகளையும் விட்டு வெகுதூரத்தில் புலம்பெயர்ந்து இருந்தாலும் எம் அன்பும் ஆதரவும் நினைவுகளும் பங்களிப்பும் தாயக உறவுகளுடன் என்றும் தொடரும் என்பதையும் இந் நாளில் உள்ளத்தில் இருந்து உதிர்க்கிறது திங்கள் நட்பு வட்டம்.
கிருபா பிள்ளை
தொடர்புகளுக்கு: 0014164145562
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
திங்கள் வட்டம் பற்றித் தெரியுமா? | வெற்றிநடைபோடும் திங்கள் நட்பு வட்டம்