MLB All-Star விளையாட்டின் ஆரம்பத்தில் கனடிய தேசிய கீதத்தின் நிலை!
San Diego, California. பெக்ரோ பார்க்கில் இடம்பெற்ற MLB All-Star விளையாட்டின் ஆரம்பமாக கனடிய தேசிய கீதம் குறிப்பிட்ட குழுவினரால் பாடப்பட்டபோது குழுவில் ஒருவர் “With glowing hearts we see thee rise. The True North strong and free.”என்ற வழக்கமான வரியை மாற்றி “We’re all brothers and sisters, all lives matter to the great.” என பாடியயுள்ளார்.
இதனை கேட்டதும் பல ரசிகர்கள் திகைப்புடன் ஆச்சரியம் அடைந்தனர்.சொற்களை மாற்றிய இச்செயலிற்கு சமூக ஊடகங்கள் மூலம் பலத்த கண்டனம் வெளியாகியது.
நால்வரை கொண்ட மேற்படி குழுவில் ஓருவராகிய றெமிகோ பெரெய்ரா என்பவரே இச்செயலிற்கு காரணமாவார்.
பிரபல்யமான ஒரு விளையாட்டு நிகழ்வில் கனடிய தேசிய கீதத்தை தவறாக வழி நடத்தி பாடியது Tenors குழுவில் இருந்த ஒரு “ஓநாயின்”தவறு என கூறப்படுகின்றது.
“All Lives Matter” அண்மையில் யு.எஸ்சில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூடுகளின் பின்னர் ஆன்லைனில் ஒரு பொதுவான பதிலளிப்பாக வந்துள்ளது.
தங்கள் குழுவில் ஒருவரின் அவமரியாதையான தவறாக வழிநடத்தப்பட்ட இச்செய்கை குறித்து குழு மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்தது.
தனது சொந்த அரசியல் கண்ணோட்டத்திற்கு இந்த மேடையை றெமிகோ பெரெய்ரா உபயோகித்தது கனடாவின் பொக்கிசமான தேசிய கீதத்தை அவமதித்தது தங்களிற்கு வெட்கமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளதென குழு கூறியது. இச்சம்பவத்திற்கு கனடிய மக்கள், மேஜர் லீக் பேஸ் போல், நண்பர்கள், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் அனைவரிடமும் மனமார்ந்த மன்னிப்பை கோருவதாக Tenors குழு கேட்டுள்ளது.
மற அறிவித்தல் வரை றெமிகோ பெரெய்ராவை குழுவிலிருந்த நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.