தமிழ் உறவுகள் தங்கள் இனத்திற்கெதிராக நடப்பவை பற்றிய புரிதல் இன்றி உள்ளனர். இதற்காகவே இவ்வாறான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
முல்லையின் குருந்தூர் பகுதியிலிருந்த ஆதிசிவன் ஐயனாராக சைவ ஆலயம் தகர்க்கப்பட்டு.. நீதிமன்ற உத்தரவை மீறி விகாரையும் கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோயில் நிர்வாகம் மற்றும் சகல தமிழ்த்தரப்புக்களும் இணைந்து பொங்கல் படைத்து எமது சைவ கடவுளான ஆதிசிவனை வழிபட முயன்றபோது
அங்கே சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையின் விகாராதிபதி தென்பகுதியிலிருந்து பிக்குகளையும் சிங்களவர்களையும் பெருவாரியாக அழைத்து… இராணுவ, காவல்துறை,தொல்லியல் திணைக்கள பேராதரவுடன் சைவ பூசைப்பொருட்களை பறித்து, வந்திருந்த தமிழர்களையும் தாக்கினர்.
அப்போது தொல்லியல் நிலமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடத்தில் தீ மூட்டக்கூடாது என்று அங்கிருந்த தொல்லியல் திணைக்களத்தினர் கூறினர். தமிழர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். தொல்லியல் நிலத்தினுள் எவரும் பிரவேசிக்க இயலாது எனும் நியதி இருக்கின்ற பொழுதே அங்கு பௌத்த விகாரை கட்டப்பட்டது.
தமிழர்கள் வழிபடக்கூடாது என்று கூறும்பொழுதே அன்று பிக்குகளால் குருந்தூர்மலையில் பிரித் ஓதப்பட்டது.
தொல்லியல் நிலமாக உள்ளதில் தமிழர்கள் நுழைய அனுமதியில்லை. ஆயினும் பிக்குகள் குடியிருக்க அனுமதியுண்டு.
தமிழர்களை மொழியாக, நிலமாக, மதமாக,கலாச்சாரமாக சகல வழிகளிலும் அழித்து பூரணமான ஓர் இனப்படுகொலையே நடாத்தி முடிக்கவே யாவும் அரங்கேறுகின்றது.
கி.அலெக்ஷன்✍️
“_Arti-1”