பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்பாடும் இன்றைய புதிய சோ என்று அழைக்கப்படும் சோ. ராமசாமி ஆவார். அவரின் கருத்துக்களும் இட்டுக்கட்டல்களும் அப்படித்தான் எம்மை சிந்திக்க வைக்கின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் குறித்தும் தற்போது நாடு கடந்த அளவில் இடம்பெறும் ஈழ விடுதலை செயற்பாடு குறித்தும் தன் வாயிற்கு வந்தபடி மிகவும் தரம் குறைந்து பேசுகின்ற சவுக்கு சங்கர் நிச்சயமாக ஸ்ரீலங்கா மற்றும் வல்லாதிக்க நாடு ஒன்றின் கைக்கூலி என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.
அதேவேளை ஸ்ரீலங்கா அரசுக்கு நோகக்கூடாது என்றும் அதற்கு பாதிப்பு வந்தால் அது தம்மை பாதிக்கும் என்றும் கற்பனையில் உண்மை யதார்த்த அரசியல் தெரியாமல் பேசுகின்ற சவுக்கு சங்கருக்கு இலங்கையில் நடக்கும் சீன ஆதிக்கம் பற்றியும் அது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் ஆபத்து பற்றியும் எதுவும் தெரியாது.
தவிரவும் இப்படி ஒரு கைக்கூலிக்கு ஏன் ஐபிசி தமிழ் ஊடகம் இடமளிக்கிறது? தமிழ் தேசிய ஊடகம் என்று கூறுகின்ற ஐபிசி தமிழ், இப்படியான கோமாளிகளுக்கு இடமளித்து தன் தரத்தையும் பெயரையும் கெடுக்கக்கூடாது.
ஈழ மக்களின் பிரச்சினை சார்ந்தும் எமது விடுதலைப் பயணம் சார்ந்தும் எத்தனையோ பணிகள் இருக்கையில் இப்படியான அர்த்தமற்ற அலட்டலுக்கு ஊடகங்கள் இடமளிக்கக்கூடாது என்பதையும் இனத்தின் சார்பில் சமூக அக்கறை கொண்ட ஊடகத் தரப்பினர் என்ற வகையில் வலியுறுத்துகிறோம்.
கிருபா பிள்ளை