பூகோள அரசியலை ஈழத் தமிழ் மக்கள் தமது நலன் சார்ந்தும் விடுதலை சார்த்தும் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பூகோள அரசியல் தமது நலன் சார்ந்தே ஈழத் தமிழ் மக்களை அணுகி வருகின்றது.
இன்று உலகில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் பூகோள அரசியல் வினைகளாகவே நடக்கின்றன. கடந்த காலம் முழுவதும் நாம் கண்ட அனுபவங்களும் எதிர்கொண்ட பாடங்களும் எமக்கு முக்கியமானவை.
அந்த அடிப்படையில், தற்போது உக்கிரேன் – ரஷ்யா பிரச்சினையில் ரஷ்யாவின் கை ஓங்குவதே ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமானது. நன்மைகளை தரக் கூடியது.
உலகமே ஆதிக்க நாடுகளில் அரசியல் ஆடுகளம் ஆகியுள்ள நிலையில், இலங்கைத் தீவை சுற்றி இடம்பெறும் நிகழ்வுகளும்கூட நமக்கு இத்தகைய சிந்தனைகளை நோக்கியே நகர்த்துகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திக் களமாடிய ஈழத் தமிழர்கள், எழுபது வருடங்களாக விடுதலைக்காக போராடிய இனம் என்ற வகையில் நாம் சந்தித்த இழப்புக்களை நிவர்த்தி செய்ய அறிவை ஆயுதமாகக் கொண்டு சிந்தித்து பயணிப்போம்.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]