பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச்சிறந்த பண்பாட்டு தினம். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த இயற்கை போற்றும் நாள். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த நேயத்தின் நன்னாள்.
இந்த நாளில் ஈழத் தமிழர்களாகிய நாம் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியமானது. விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி என்றார் எம்மினிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
இன்றைய காலத்தில் தமிழ் ஈழ நிலத்தில் மட்டுமின்றி, புலத்திலும் ஈழத் தமிழ் மக்களை வீழ்த்துவதற்கான சதிகளும் சூழ்ச்சிகளும் கச்சிதமாக நிறைவேற்ற முயலப்படுகிறது.
இதில் புலத்தில் உள்ள சில பண முதலைகளும் அதிகாரப் பிரியர்களும் ஊடக ஒழுக்கமற்ற அற்பர்களும் இணைந்திருப்பது வேதனையுமானது. அவர்களின் முகத்திரைகளை கிழிப்பது காலத்தின் தேவை.
எனவே விழிப்பான பொங்கலில் ஊடே விடுதலையை வெல்லும் பயணத்தில் நாமனைவரும் உறுதியுடன் பயணிக்க வேண்டும். அதுவே தலைமகனுக்கும் மாவீரர்களுக்குமான மகத்தான மரியாதை.
எனதனைத்துறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.
கிருபா பிள்ளை