“ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசி தமிழகத்தில் கட்சி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் மதிப்பிற்குரிய வைகோவும் திருமாவளவனும். எனினும் இன்றைக்கு இவர்கள் சாதிக்கும் மௌனம் ஆளும் கட்சி என்பதன் அடக்கமா என்று கேள்வி எழுகிறது..”
தமிழகத்தில் ஈழ விடுதலையை மையப்படுத்தியும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மையப்படுத்தியும் பல கட்சிகள் தமது அரசியல் செயற்பாட்டையும் இருப்பையும் கொண்டுள்ளன. அது ஈழ மக்களுக்காகவும் புலிகளுக்காகவும் தமிழக மக்கள் வழங்கும் ஆதரவு.
இதில் முன்னணியில் இருக்கும் திரு வைகோ அவர்களும் திருமாவளவன் அவர்களும் இன்றைக்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பங்குதாரரர்கள் ஆக உள்ளனர். இப்போது அவர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
ஆனால் கடந்த காலத்தில் வைகோவும் திருமாவளவனும் ஈழத்திற்காக பல போராட்டங்களை செய்திருந்த நிலையில் ஆளும் கட்சி ஆகிவிட்ட பின்னர்பெரிதான எந்தச் செயற்பாடுகளையும் செய்வதைக் காணமுடியவில்லை. குறிப்பாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விவகாரத்தில் கூட இவர்களின் அக்கறையும் செயற்பாடும் போதாமல் உள்ளதை காண முடிகிறது.
ஈழம் இன்னும் எரியும் பிரச்சினைகளைக் கொண்டிருக்கையில், ஆளும் திமுக ஆட்சி வழியாக இந்திய அரசியற்கு அழுத்தம் கொடுத்து, ஈழத் தமிழர்களின் கோரிக்கையை வலுப்படுத்த முடியும்.
ஆனால் இவர்கள் எதனையும் கோராமல் மிகவும் அடக்கமாக உள்ளனர். ஆளும் கட்சியில் தாம் பங்காளிகளாக உள்ளனர் என்பதனால் இவ்வாறு அடக்கமாக உள்ளனரா என்றே கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
ஈழ விடுதலையின்மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் உண்மைப் பற்று இருக்குமாக இருந்தால் இவ் இருவரும் தற்போதும் ஆளும் கட்சியில் உள்ள பலத்தைக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வரமுடியும் என்பதை உரிமையுடன் உணர்த்துகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]