ஒரு தேவை என்று வரும் போது ஒருவரை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறிவது நல்ல பண்போ, நல்ல செயலோ கிடையாது. ஊரில் சொல்வதைப் போல கறிவேப்பிலையாக யாரையும் பயன்படுத்தாதீர்கள்.
சிலர் தமக்கு ஒருவருடன் பிரச்சினை ஏற்படுகின்ற போது இன்னொருவரின் துணையுடன் அந்த பிரச்சினையை தீர்க்க முயல்வார். அந்த இன்னொருவரும் நல்ல எண்ணத்தில் துணையாக நின்று பிரச்சினை சேர்த்து இருவரையும் சேர்ப்பார்.
பின்னதாக, தன் தேவை முடிந்தவுடன் அந் நபர் துணையாக நின்றவரை தூக்கி எறிகின்ற செயல் வேதனை தரும் செயலாகும். ஆனால் அதனை செய்கின்ற அந் நபர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நல்ல நண்பரை இழந்து தவிப்பார்.
முன்னைய காலத்தில் தான் வினை செய்தால் அடுத் ஜென்மத்தில் தாக்கும் இப்போதெல்லாம் முற்பகல் செய்யின், பிற்பகல் தாக்கும். எல்லாவற்றையும் கடவுள் பார்க்கிறார். அவரின் தீர்ப்பு எல்லோருக்கும் உண்டு.
கடவுளின் தீர்ப்பு இல்லாவிட்டால் மனிதர்களின் ஆட்டங்களுக்கு முடிவிருக்காது. நல்லதையே எண்ணி நல்லதையே செய்வோம். நன்மைகள் வாழ்வில் இனிய சொத்துக்களால் செல்வங்களாய், அழகாய் நம்மை சூழும்.
கிருபா பிள்ளை