தமிழ் கட்சிகளுடன் சந்திப்பை நடாத்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நல்ல விடயம். ஆனால் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழர்களை ஏமாற்றியது போல இனியும் நடக்கக்கூடாது என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் தமிழ் தலைமைகள் இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபிலாசையை தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். ஸ்ரீலங்கா அரசுக்கு தமிழர் கோரிக்கையை வெளிப்படுத்த வேண்டும்.
தற்போது ரணில் விக்கிரமசிங்க நடாத்தும் ஆட்சியை பார்க்கின்ற போது அவருக்கு தமிழர்களின் ஆதரவு எதிர்காலத்தில் தேவைப்படும் என்று தெரிகிறது.
எனவே, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று தீர்வை வழங்கினால் வரும் காலத்தில் ரணிலுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பார்கள். முடிவு ஸ்ரீலங்கா அரசின் கைகளில். முடிவு ஜனாதிபதி ரணிலின் கைகளில்.
அத்துடன் தமிழர்களை ஏமாற்றிய ஸ்ரீலங்கா ஜனாதிபதிகள் அனுபவித்த கர்ம வினைகளை இன்றைய ஜனாதிபதி ரணிலும் நினைவில் கொண்டு காரியங்களை முன்னெடுப்பது நல்ல படமாகவும் அனுபவமாகவும் அமையும்.
கிருபா பிள்ளை