இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின் உண்மையான வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சியில் இருப்பவர்கள் இவ்வாறு சொல்வதும் அவர்களே ஆளும் கட்சி ஆன பிறகு மாறுவதும் தான் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் கசப்பான அனுபவங்கள்.
எனவே 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறும் சஜித் பிரேமதாசா அதனை தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அது தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த புரிதலை ஏற்படுத்தும். அத்துடன் 13ஐ நடைமுறை படுத்த தென்னிலங்கை முற்போக்கு சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.
அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் சஜிதை நோக்கியும் தென்னிலங்கை மக்களை நோக்கியும் குரல் கொடுப்பதே சிறந்த ஆரோக்கியமான அரசியல் வழி ஆகும்.
கிருபா கிசான்
http://Facebook page / easy 24 news