கடந்த பல வருடங்களாக பல இந்திய தலைவர்கள் வந்தபோதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை தவறிவிட்டு வரலாற்றில் வெறுமையை விட்டுச்சென்றுள்ளனர். இன்றைய இந்திப் பிரதமர் மோடி அவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். அதில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக் கடிதத்தை ஈழ மக்களின் அவசரமான அவசியமான கோரிக்கையாக ஏற்று இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அமைதி நிலை ஏற்பட வேண்டும்.
பாகிஸ்தானின் உருவாக்கத்தில் காந்தியும் பங்களாதேஷ் உருவாக்கில் இந்திரா காந்தியும் தம் பெயரை பதித்துச் சென்றதுபோல ஈழ மக்களின் உரிமை விடியலில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் பெயரை பதிக்க வேண்டும்.
கடந்த கால இந்திய தலைவர்கள் போலன்றி துணிச்சலுடன் இந்த முடிவுயை இந்தியப் பிரதமர் மேற்கொண்டால் ஈழத் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழக மக்களின் ஆதரவும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு கிடைக்கும். இந்திய அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் நிகழும்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் மக்களின் கைகளில் காவல்துறை காணி அதிகாரம் கிடைக்கும்போது தமிழர்களின் இலக்கின் ஆரம்பப்படியாக அது மாறுவதுடன் இந்தியாவுக்கு சீனா போன்ற அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாப்பும் மலரும்.
எனவே ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை இந்தியப் பிரதமர் தவறவிடாமல் மேற்கொண்டு வரலாற்றில் நிலைத்து அரசியல் மாற்றங்களை உருவாக்குவார் என்று ஈழ மக்களின் சார்பில் நானும் நம்புகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]