“சம்பந்தரின் சுமுகமாக முடிந்தது என்ற பழைய பல்லவியை கேட்டுக் கேட்டே தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த காதுகளும் புளித்துப் போய்விட்டன. இம்முறை இந்த பேக்காட்டு விளையாட்டுக் காட்ட வேண்டாம் என முற்கூட்டியே சம்பந்தருக்கு எடுத்துரைக்கின்றேன்…” – கிருபா பிள்ளை
தற்போது கோத்தபாய ராஜபக்ச தீர்வு பற்றிப் பேசலாம் வாருங்கள் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அழைத்துள்ளார். இலங்கையில் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் சம்பந்தர்மீதான அவரின் அழைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஒரு தனியான விவாதம்.
ஆனால் சம்பந்தர் கோத்தபாயவை சந்தித்துவிட்டு வெளியில் வந்து சுமுகமாக பேச்சுவார்த்தை முடிந்தது என்று பழைய பல்லவியை பேசி இனியும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதை இப்போதே கடும் தொனியில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் மக்களுக்கு தேவையான தீர்வு தமிழ் மக்கள் வலியுறுத்தும் விடயங்கள் இன்று தாயகத்தை உலுப்பும் எரியும் பிரச்சினைகள் இவைகள் குறித்து வெளிப்படையாகவும் விரைவாகவும் நடைமுறைக்கு வரும் தீர்வுகளைப் பற்றி பேசி முடிவு எட்ட வேண்டும்.
அதன் உண்மை தன்மைகளை ஊடகங்களின் முன்பாயும் மக்களின் முன்பாயும் தலைமைகள் பேச வேண்டும். கடந்த பல வருடங்களாக சுமுகமாக முடிந்தது என்று பழம் கதை பேசியது போல பழைய பல்லவியை கூறி இனியும் காலம் கடத்த வேண்டாம்.
போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் எங்கள் மக்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாம் உண்மை வழியில் கடும் உற்சாகம் கொண்ட பயணத்தில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]