இலங்கையில் தொடர்கின்ற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களின் ஒற்றுமைதான் மிக முக்கியமான தேவையாக உள்ளது. தமிழர்களாகிய நாம் ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால் முதலில் எம்ிமடம் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
அத்துடன் தமிழர்களாகிய நாம் பூலோக அரசியல் அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய பூலோக அரசியல் நகர்வுகளை அறிந்து அதற்கு ஏற்ப எமது செயற்பாட்டை மேற்கொள்ளுவதே சிறந்த அறிவுபூர்வமான செயற்பாடு ஆகும்.
கடந்த காலத்தில் பேரம் பேசக் கூடிய சந்தர்ப்பங்களை எமது தமிழ் தலைமைகள் தவிர்த்துக் கொண்டதும் இங்கே நினைவுகொள்ள வேண்டிய விடயம். எதிர்காலத்தில் பேரம் பேசுகின்ற ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டு அரசியல் சக்திகளை அணுக வேண்டும்.
தேர்தல் காலத்தில் ஏற்படுகின்ற நகர்வுகள் மற்றும் கூட்டணிகள் அல்லது ஆதரவு அளித்தலின் போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பேரம் பேசுதலை வலுப்படுத்த வேண்டும். கடந்த காலம் போன்று இனியும் ஏமாறக் கூடாது. அத்துடன் நாம் அரசியல் ரீதியாக வெளிப்படைத்தன்மையை கொண்டிருக்க வேண்டும்.
பெரும்பான்மையின மக்களுக்கு எம்மை புரிய வைப்பதும் அவர்கள் எம்மை புரிந்துகொள்ளுவதற்கான வழியாகும். உண்மையை எடுத்துரைத்து ஒற்றுமையுடன் வெளிப்படையான அரசியலை முன்னெடுக்கின்ற போது அதுவே மாண்ட மக்களுக்கு செய்கின்ற மகத்தான அஞ்சலி எனலாம்.
புலத்தில் வாழ்ந்தாலும் தேசிய உணர்வுடன் வாழும்
கிருபா கிருசான்