“இப் பூமியில் அனைத்து செயற்பாடுகளின் வேராகவும் மகத்தான காதல் அன்பே அத்திவாரமாய் இருக்கிறது. காதல் எமக்குள் நம்பிக்கையாகவும் திடசங்கற்பமாகவும் பூரித்து எழுகிறது…”
இன்று காதலர் தினம். உலகின் காதலர்கள் தம் பேரன்பை கொண்டாடும் நாள். வாழ்வின் அத்தனை தருணங்களிலும் அன்போடு இருப்பவர்கள் இந்த நாளை ஒரு எடுத்துக்காட்டாக வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
கல்லை உளி சிற்பம் ஆக்குவதைப் போன்று காதல் ஒரு சாதாரணமானவனை சாதனையாளன் ஆக்குகிறது. உலகின் பெரும்பாலான சாதனையாளர்களுக்குப் பின்னால் ஒரு மகத்தான காதல் நிச்சயம் இருக்கும்.
எமது மண்ணின் வீரம் செறிந்த போராட்டத்தின் பின்னால் எமது தலைவர் கொண்டிருந்த காதலும் அதனை இந்த உலகில் மிகச் சிறந்த உன்னதமான காதல் ஒழுக்கமாக வாழ்ந்து நிலைத்ததும் எவ்வளவு பெரிய பாடம்.
உண்மையில் இன்றைய நாளில் அந்தக் காதலை நினைந்து கொள்கிறேன். மண்ணுக்காக மக்களுக்காக உழைக்கும் ஒரு உன்னதப் போராளியின் காதலை நாமும் கற்றுக்கொண்டு மண்ணுக்கும் மக்களுக்கும் காதலுக்கும் உண்மையாய் வாழ்வோம்.
இந்த உலகில் அன்பின் துணையுடன் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு அனைத்தையும் வென்று சிறப்போம். காதலில் திளைத்து இந் நாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]