புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் உன்னதமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். அந்த வகையில் பிரபல நடன ஆசிரியர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.
இவர் புலம்பெயர் தேசத்தில் தமிழரின் பண்பாட்டு கலையான நடனத்தை புதிய தலைமுறையினருக்கு கற்பித்து அந்தக் கலையின்பால் பெரும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் சாதனையையும் ஏற்படுத்தி வருகிறார்.
எளிமையும் பேராற்றலும் கொண்ட இவர்மீது இன்றைய இளைய தலைமுறை கலை மாணவர்கள் பெரும் மதிப்பும் பற்றும் கொண்டிருப்பது இவரின் விளம்பரமற்ற நடனக் கலையாளுமைக்கு தக்க சான்றாக அமைகின்றது.
நிரோதினி பரராஜசிங்கத்தின் அடுத்த பிரவேசமாக சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலும் பெண்களின் மேம்பாட்டை முன்னெடுக்கும் வகையிலும் இந்த நிகழ்வு அமைய உள்ளமை சிறப்பு அம்சமாகும்.
இந்த நிகழ்வுக்கு எம் பூரண ஆதரவை வழங்க வேண்டியது எம் அவசிய கடமையாகும். நிரோதினி அவர்களுக்கு ஈஸி24நியூஸ் தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது.
-கிருபா பிள்ளை