கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்த நிலையில் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதை கைவிடுதல் மற்றும் கட்டுப்பாடற்ற உலாவுகை தேவை என கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது.
எனினும் இப் போராட்டம் சட்ட விதிகளை மீறுகின்ற வகையில் அமைந்திருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றது. நாட்டின் ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இப் போராட்டம் அமைந்திருப்பதும் மற்றொரு விடயம்.
அதேவேளை இச் சந்தர்பத்தில் தமிழர்களின் போராட்டத்திற்கு ஒரு மதிப்பும் புகழராமும் கிடைத்துள்ளது. டிரக் ஓட்டுனர்களின் போராட்டத்தை கண்டு முகம் சுழித்துள்ளன ஊடங்கள். அத்துடன் தமிழர்களின் போராட்ட வழிமுறைப் பண்புகள் குறித்தும் மதிப்பை நினைவுபடுத்தியுள்ளது.
2009இல் இலங்கையில் போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழர் அமைப்புக்கள் சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இதே ஒட்டோவா நகரில் தமது ஜனநாயகப் போராட்டத்தை சிறந்த கட்டமைப்புடன் முன்னெடுத்துள்ளதாக சிபிசி ஊடக அமைப்பு புழகழாரம் சூட்டியுள்ளது.
இது ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கும் ஈழ விடுதலைப் பாதையின் ஒழுக்கச் செயலுக்கும் கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரமாகும். இதே வழியில் எம் உரிமைகளை வெல்ல முடியும் என்பதை இத் தருணத்தில் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுவோம்.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]