என்றுமில்லாத வகையில் ஸ்ரீலங்கா பெரும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருளாதாரம் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை ஏற்றம், பண இருப்பு இன்மை என்று ஸ்ரீலங்கா அரசு அதளபாதாளத்தில் விழுந்து துடிக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்ற எதிர்கட்சிகள் களம் இறங்கியுள்ளன.
இந்த நேரத்தில் எமது தமிழ் தலைமைகள் ஆட்சி மாற்றத்திற்கு துணைபோகக் கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சி மாறுவதால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது கடந்த கால அனுபவம்.
கடந்த காலத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு ஆதரவு அளித்து சாதித்தது ஒன்றுமில்லை. தமிழர் அரசியலை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியதே தமிழ் தலைமைகள் செய்த ஒரே வேலை.
எனவே ஆட்சி மாற்றத்திற்கு முண்டு கொடுக்காமல் பேசாமல் வேடிக்கை பார்த்தால் மாத்திரம் போதும். தமிழர் உரிமையை வெல்லும் வழி வாய்ப்பு மற்றும் செயல்களில் மாத்திரம் கரிசனை காட்டுங்கள்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]