தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் மாபெரும் எழுச்சிப் போராட்டங்களை நடாத்த வேண்டும்.
தமிழ் இனத்தின் விடுதலை, உரிமை, நீதி என்பனபவற்றை வலியுறுத்தியும் தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் வரையிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சிங்கள தேசத்தில் பொருளாதார நெருக்கடிக்காக இரவுபகலாக ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக மக்கள் போராட அனுமதிக்கப்படுகின்ற நிலையில் வடக்கு கிழக்கில் மக்கள் தமது உரிமைகளுக்காக ஏன் போராட முடியாது?
இதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முதலில் சிந்தித்து தயாராக வேண்டும். அவர்கள் மக்களுக்கு தலைமை ஏற்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடாத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]