கனடாவில் உணவகங்களில் இன்றிலிருந்து “வெளியில் இருந்து சாப்பிடும் அனுமதி” வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது நல்ல விடயம்தான். அத்துடன் பயணங்கள் பற்றியும் எல்லைகளைத் திறப்பது பற்றியுமான விடயங்கள் குறித்தும் இப்போது பேசப்படுகின்றது. இது குறித்து நாம் சற்று யோசிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
ஏன் இந்த அரசாங்கம் அவசரப்படுகின்றது. அவசரப்படுவதால்தான் உலக அளவில் மீண்டும் மீண்டும் முதலாவது அலை என்றும் இரண்டாவது அலை என்றும் மூன்றாவது அலை என்றும் நாலாவது அலை என்றும் பேரழிவுக்கு முகம் கொடுக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் உள்ளுர் அளவில் கட்டுப்பாட்டை தளர்த்தலாம். கனடாவை எடுத்துக் கொண்டால் கனடாவுக்குள் கட்டுப்பாட்டை முதலில் தளர்த்தலாம். அதன் பிறகு எல்லைகளையும் விமான நிலையங்களையும் திறப்பதை பற்றியும் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது பற்றியும் அரசாங்கம் சிந்திக்கலாம். இதுவே சிறந்த தீர்மானமாகவும் அமையும்.
முதலில் நாட்டில் வாழ்கின்ற மக்கள் சராசரியான வாழ்வை வாழ வேண்டும். அதுவே நாட்டுக்கும் அரசுக்கும் முக்கியமானது. நான்காவது அலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உள்ளுர் கட்டுப்பாடு முக்கியமானது. அதன் பிறகே வெளியில் இருந்து வருகின்றவர்களின் பயணங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.
கிருபா கிசான்