“முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரங்களின் எதிர்வினையாகவே இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளதா என்ற அடிப்படையிலும் நாம் சிந்திக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்படடு தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் இலங்கை பெரும் வளர்ச்சியை எட்டலாம்…”
இலங்கை என்றுமில்லாத வகையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது. தற்போது இலங்கை அரசு இந்தியாவிடமும் உதவியை பெற முனைந்து வருகின்றது. சீனாவிடமும் அதிக கடன் படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
என்றுமில்லாத வகையில் மக்கள் வறுமை சுமையை சுமக்கத் தொடங்கியுள்ளனர். சிறிமாவோ பண்டார நாயக்காவின் காலத்து பொருளாதார நிலை இலங்கைக்கு திரும்புவதையே எம்மால் உணர முடிகின்றது.
போரால் தமிழ் மக்களிடமிருந்து அடித்துப் பெற்று ஒன்றாக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கையை விட்டு தற்போது சிங்கள மக்களும் புலம்பெயர்ந்து வருகிறார்கள். நாம் போரால் புலம்பெயர சிங்கள மக்கள் பொருளாதாரப் போரால் புலம் பெயர்கின்றனர்.
எப்படியானாலும் வேதனை தருகின்ற விசயமே. தமிழ் மக்களுக்கு இத்தகைய பொருளதார நெருக்கடிகள் புதியவையல்ல. அத்துடன் தமிழர் தேசத்தின் கட்டமைப்பு எத்தகைய இடர்களையும் கடந்து வாழும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
சிங்கள தேசம், முள்ளிவாய்க்கால் துயரங்களுக்கு நீதியை வழங்கி தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமையை மீள அளித்தால் இலங்கையின் எல்லா நெருக்கடிகளும் தீராலாம். சர்வதேசத்தின் நன்மைகளும் கிடைக்கும்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]