இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய ஆட்சி மாற்றம் வருவதற்கு ஏதுவான நிலை தோன்றி வருகிறது.
சர்வ கட்சி அரசாங்கம் அமையவுள்ள நிலையில் தமிழ் தலைமைகள் இனத்தின் நீதி மற்றும் விடுதலை உரிமையை பெறும் வகையில் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசு தமது பிரச்சினைகளை தீர்க்க ஒன்றினையும் தருணத்தில் தமிழ் தலைமைகள் எமது இன உரிமைக்காக ஒன்றுபட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.
ஒன்றுபட்டு குரல் கொடுத்தல் சர்வதேசத்தை இலங்கை மீது அழுத்தம் கொள்ள வைத்தல் என அர்த்தபூர்வமான காரியங்களில் எம்மவர்கள் ஈடுபடுதல் காலத்தின் அவசியமாகும்.
கிருபா பிள்ளை