இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முகம் சுழிக்க வைக்கிறது.
நேற்றைய தினம் பெரும்பான்மையின மக்கள் இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகை இட்டனர்.
ஜனநாயக வழியில் போராடிய சிங்கள மக்களை தீவிரவாதிகள் என இலங்கை அரசு கூறியுள்ளது.
சிங்கள தேசம் இப்படி நெருக்கடியை அறுவடை செய்கின்ற போது தமிழர்களின் தாயகத்தை அவர்களின் கையில் கொடு என்று வற்புறுத்தும் நிலைக்கு ஆளாகிறோம்.
இலங்கை அரசு சிங்கள மக்களையே – சிங்கள தேசத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் ஏன் தமிழர் தாயகத்தை ஆள விரும்ப வேண்டும்?
தமிழர்கள் தங்கள் தலைவிதியை தாமே தீர்மானித்து பொருளாதார நெருக்கடியை வென்று மீள்வார்கள்.
எனவே எங்கள் தேசத்தை எங்கள் கையில் கொடு என்று தமிழ் தலைவர்கள் வற்புறுத்த வேண்டும். சர்வதேசம் செவி சாய்க்க வேண்டும்.
கிருபா பிள்ளை