அண்மைய காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் எமது இனத்திற்கு எதிராக பின்னப்படுவதைப் பார்க்க முடிகின்றது. எமக்குள் ஒற்றுமையீனத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு குந்தகம் விளைவிப்பதே இதன் பின்னால் உள்ள நோக்கம் என்பதும் புலப்படுகிறது.
கனடா தேசத்தில் இன்று ஈழ ஆதரவு வலுப்பெற்றுள்ளது. கனேடிய அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழர் தேசத்தை ஏற்றுக்கொள்வதில் கனடா உலகிற்கு முன்மாதிர நாடாக இருப்பது கனேடிய தமிழர்களாகிய எமக்கும் பெருமையாகும்.
இந்த நிலையில் கனடாவில் இருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் பல அமைப்புக்களை ஸ்ரீலங்கா அரசு அழைத்து தமிழர்களுக்கு தீர்வு தருவதாக கூறி சில பிரகடனங்களை செய்துள்ளது.
சுயநிர்ணய உரிமையை கைவிடுதல், தமிழீழத்தைக் கைவிடுதல், இனப்படுகொலை விசாரணையைக் கைவிடுதல் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்த தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு குறித்த தனிப்பட்ட அமைப்புக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை இவர்கள் முதலில் உணரட்டும்.
அத்துடன் ஈழத்திலும் உலகம் முழுவதிலும் பரந்துள்ள ஈழத் தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் தலைவரின் கொள்கை மற்றும் இலட்சியத்தில் உறுதியான பற்றுடன் பயணிக்கின்ற போது இப்படியான சூழ்ச்சிகளை முறியடித்து எம் மக்களின் தாகத்தை வெற்றிபெறச் செய்ய முடியும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
‘ஊடகப் போராளி’ கிருபாப் பிள்ளை