நடிகர் ஜெய் ஆகாஷிற்கு roar தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார். அத்துடன் ரோஜாக் கூட்டம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போதும் நடிகர் ஜெய் ஆகாஷ் சி-தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் சீரியலில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறந்த தொலைக்காட்சி தொடரின் கதாநாயகன் விருதையும் இவர் வென்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பிறந்து தென்னிந்திய சினிமாவிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் பெரும் சாதனை செய்யும் இவரின் நடிப்புச் சாதனை மிகவும் பாராட்டத்தக்கது.