iPhone விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியது அப்பிள்
சம காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்ற போதிலும் அப்பிளின் ஐபோன்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது.
அப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐபோனினை 2007ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசி முதன் முறையாக அறிமுகம் செய்வது தொடர்பில் அப்பிள் நிறுவனத்தினை உருவாக்கிய காலம் சென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ம் ஆண்டு அறிவித்தலை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு புதிய அம்சங்கள், வடிவமைப்புக்களை கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
அவ் வகையில் இதுவரை சுமார் ஒரு பில்லியன் வரையான ஸமார்ட் கைப்பேசிகளை உலகமெங்கும் விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது அப்பிள் நிறுவனம்.
இது தொடர்பான அறிவித்தலை அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் மேலும் மூன்று வகையான ஐபோன்களை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.