ஏழு வகையான Iogo yogurt பொருட்கள் கனடா பூராகவும் மீள அழைக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகின்றது. இவற்றுள் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கலாம் என கருதப்படுவதால் இந்த மீள அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கற்சுவான், மனிரோபா, ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மாகாணங்களில் விற்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கவேண்டாம் என மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
இது குறித்து கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி புலன் விசாரனை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பொருட்கள் பாவனையால் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதற்கான தகவல்கள் தெரியவரவில்லை.
கீழ் காணப்படும் பொருட்கள் மீள அழைக்கப்பட்ட பட்டியலில் அடங்குகின்றன. பாதிக்கப்பட்ட பொருட்களின் குறியீடுகளை CFIA’s வலைத்தளத்தில் கண்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.