இது “இளையராஜாவின் மோதிரம்” என்ற வெளிவராத படத்தின் துவக்கவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஸ்டில்ஸ் ரவி பகிர்ந்துள்ளார்.
கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனம், எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் துவக்கப்பட்ட படமாம்.
அன்றைய நிகழ்வுகளை வைத்து அரசியல் நையாண்டியாக எழுதப்பட்ட கதை, இளையராஜாவும் வடிவேலுவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருந்தனர்.
ஒரு கட்டத்தில் நடிக்க இளையராஜா தயங்கியதால் படம் மேலும் வளராத நிலை ஏற்பட்டது.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் நான் நடிக்கிறேன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கட்டும் என்று வாலியை அனுகியுள்ளார்.
எஸ்பி.முத்துராமன் இயக்கினால் மட்டுமே இந்த கதையை கொடுப்பேன் என்று வாலி மறுத்துவிட்டாராம். இந்தத் திரைப்படம் வந்திருந்தால் ஒரு சுவாரசியமாக படமாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
புகைப்படம்: ஸ்டில்ஸ் ரவி