Hawaiian pizza வை கண்டு பிடித்த பாராட்டை பெற்ற சாம் பனொபொலஸ் என்ற கனடியர் தனது 83-வது வயதில் காலமானார்.
லண்டன் ஒன்ராறியோ வைத்தியசாலையின் ஆன்லைன் இரங்கல் ஒன்று இவர் திடீரென கடந்த வியாழக்கிழமை இறந்து விட்டதாக தெரிவிக்கின்றது.
கிரேக்கத்தில் பிறந்த இவர் 1954ல் கனடாவிற்கு குடி பெயர்ந்தார். இவரது சகோதரர்கள் இருவர் கனடாவில் ஒரு எண்ணிக்கையான உணவகங்களை நிர்வகித்து வந்தனர்.
1962-ல் சதம், ஒன்ராறியோவில் உள்ள சட்டலைட் உணவகத்தில் முதல் ஹாவாயன் பிஸ்ஸாவை தயாரித்தார்.
தகரத்தில் அடைக்கப்பட்ட அன்னாசிப்பழ துண்டுகளை பிஸ்ஸாவின் மேல் ரொப்பிங்காக போட்டால் மிகவும் ருசியாக இருக்கும் என தீர்மானித்து தயாரிக்க தொடங்கினார்.
விமர்சகர்களின் ஆரோக்கியமான பகுதி ஒன்றாக அமைந்த போதிலும் இவரது பழத்தினாலான உருவாக்கம் பிட்சா மெனுவில் புகுத்தப்பட்டமை உலகம் பூராகவும் பிரதானமானது.
இவரது இறுதிசடங்கு திங்கள்கிழமை லண்டன் ஒன்ராறியோவில் நடை பெறும்.