வருங்கால கனடா பிரதமராக முன்னிலை வகிப்பதற்கான அதிக வாய்ப்பை கொண்டுள்ள கனடா நாட்டின் முன்னணி தலைவர் பற்றிக் புரோன் (Patrick brown) அவர்களுக்கும் தமிழ் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் முன்னணி தமிழ் ஊடக நண்பர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வை ஈஸி24நியூஸ் இணையத்தின் நிறுவனர் கிருபா பிள்ளை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். ஈஸி24நியூஸ் முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதுவாகும்.
பிராம்ப்ரன் (Brampton) மேயராக தற்போது பதவி வகிக்கும் பற்றிக் புரோன் அவர்கள் விரைவில் கென்சர்வேட்டீவ் (Conservative party) கட்சியின் தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்பார் என்றும் தமிழ் சமூகத்துடன் மிகவும் நெருங்கிய உறவு பேணும் அவருக்கு எமது ஆதரவு சிறப்பாக இருக்கிறது என்றும் கிருபா பிள்ளை இதன்போது கூறினார்.