Facebook Messenger Lite! கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்
இன்டர்நெட் டேட்டாவை சிக்கனம் செய்ய பல்வேறு மென்பொருள்கள் மற்றும் கருவிகள் அதிக அளவில் தற்போது அறிமுகபடுத்தப்பட்டு வருகின்றன.
இதில் புதிதாக இணைந்திருப்பது தான் பேஸ்புக் மெசன்ஜர் லைட் சேவை. பேஸ்புக் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள இந்த செயலியின் செயல்பாடுகளை பற்றி காண்போம்
இந்த பேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலியானது தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மட்டுமே செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைவான வேகத்திலும் சீரான இண்டர்நெட் சேவையை வழங்க அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த செயலியில் வீடியோ காலிங் வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரத்தில் ஈடுப்பட்டுளோருக்கும் பேஸ்புக் நிறுவனமானது தனி மெசன்ஜர் சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த பேஸ்புக் மெசஜர் லைட்டில் இது வழங்கபடவில்லை.
தற்போது இந்த மெசன்ஜர் சேவை இலங்கை, கென்யா, மலேசியா போன்ற நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.