EASY Entertaining Night 2023 நிகழ்வில் 50 விளம்பரதாரர்கள் கைகோர்த்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஈசி24நியூஸ் நிறுவனர் கிருபா பிள்ளை, இது அன்பு சாம்ராஜியம் என்றும் அன்புக்கும் நட்புக்குமாய் தானாய் சேர்ந்த நண்பர்கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள EASY Entertaining Night 2023 நிகழ்வில் பிரபல நடிகை கஸ்தூரி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வுக்கு ஈசி24நியூஸ் நிறுவனரும் ஊடகவியலாளருமான கிருபா பிள்ளை ஏற்பாடு மற்றும் ஒழுங்கமைப்பை மேற்கொள்கின்றார்.
வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் கைகொடுப்பில் மிகவும் பிரமாண்டமான வகையில் அமையும் இந்த நிகழ்வு வரும் மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு களிப்பு விருந்தாக அமையும் அதே சமயத்தில் எம் உள்ளங்களின் பொதிந்துள்ள வீர, தியாக உணர்வுகளையும் பேசிச் செல்லும்.