EASY Entertaining Night 2023 நிகழ்வுக்காய் கனடா வந்த கஸ்தூரிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. இதன் போது ஈசி24நியூஸ் இணைய நிறுவனரும், EASY Entertaining Night 2023 நிகழ்வில் இயக்குனருமான கிருபா பிள்ளையும் வர்த்தக மற்றும் நிறுவன பிரமுகர்களும் கலந்துகொண்டு நடிகை கஸ்தூரியை வரவேற்றனர்.
எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் ஈஸிஎன்டடைமன்ட் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார். உறவுகள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கஸ்தூரி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்து பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.
சத்தியராஜ், விஜயகாந்த், செல்வா, ரமேஸ் அரவிந்த், பிரபு, வினித், ஜெயராம், சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நாயகியாக நடித்த கஸ்தூரி அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் உடன் நடித்து பெரும் புகழைப் பெற்றார்.













நடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு பெருகி வருகின்றமை மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும்.
EASY Entertaining Night 2023 நிகழ்வில் 50 விளம்பரதாரர்கள் கைகோர்த்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஈசி24நியூஸ் நிறுவனர் கிருபா பிள்ளை, இது அன்பு சாம்ராஜியம் என்றும் அன்புக்கும் நட்புக்குமாய் தானாய் சேர்ந்த நண்பர்கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள EASY Entertaining Night 2023 நிகழ்வில் பிரபல நடிகை கஸ்தூரி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வுக்கு ஈசி24நியூஸ் நிறுவனரும் ஊடகவியலாளருமான கிருபா பிள்ளை ஏற்பாடு மற்றும் ஒழுங்கமைப்பை மேற்கொள்கின்றார்.
வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் கைகொடுப்பில் மிகவும் பிரமாண்டமான வகையில் அமையும் இந்த நிகழ்வு வரும் மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு களிப்பு விருந்தாக அமையும் அதே சமயத்தில் எம் உள்ளங்களின் பொதிந்துள்ள வீர, தியாக உணர்வுகளையும் பேசிச் செல்லும்.