வாழ்த்துக்கள்!
விருதும் பெரிதுவந்து சேரும் இடம்பார்த்து சேர்கிறது
வளர்ந்து வரும் புலம் பெயர் இளம் தலைமுறையினரின்
ஆரோக்கியமான வளர்ச்சியின் சின்னமாக விளங்கும்
Easy 24 News.com நிறுவனத்தின் முதல்வர் கிருபா கிருஷான் அவர்களின்
சேவைச் சிறப்பை பாராட்டி சிறந்த ஊடகவியலாளன் என்ற
விருது வழங்கி கௌரவிப்பது கண்டும் காணாமல் போவதற்று
என் கண்ணொளி இன்னும் மங்கிவிடவில்லை அதனால்
வாழ்த்துகிறேன்!
இங்கே பதிவு செய்திருக்கும் வண்ணப் படம்
புலம்பெயர் தமிழனின் வரலாற்றுத் தடம்!
தமிழையும் தமிழ் கலைகளையும்
தன் உயிரும் உடலுமாய் சுமந்து சென்று
அடுத் தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும் என்ற
அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழனும்
இதுபோன்ற தமிழர் சாதனைகளைக் கண்டு
இனி உலகெங்கும் தமிழ் தாளாமல் வாழும் என்ற
நம்பிக்கை கொள்வார்! அந்த வகையில்
பல்லின மக்களின் ஊடகத்துறை சார்ந்த பிரமுகர்கள்
சங்கமித்திருந்த மாபெரும் சபையில்
Canadian Ethnic Media Association என்னும்
பல்லின மக்கள் ஊடகங்களின் ஒன்றியம்
Easy 24 News.com செய்தி நிறுவன அதிபர் கிருபா கிருஷான் அவர்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி இருப்பது மகிழ்ச்சி!
அதையும் ஒன்ராறியோ மாகாண முதல்வர்
Kathleen Wynne முன்னிலையில் ரொறன்ரோ மாநகர பிதா
John Tory அவர்களின் கைகளால் பெற்றுக் கொள்வது மிக மிக மகிழ்ச்சி!
கொடுப்பவர் யார்! பெறுபவர் யார்! என்பதைப் பொறுத்தே
விருதின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது
விருதிற்கும் உண்டு தன்மானம்
சில விருதுகள் தவறான இடம் சென்று
தன்மானம் இழந்து வருந்துவதும் உண்டு
தகை உடையார் மிகைத் திறம் பாராட்டி
வழங்கப்படும் விருதுகளால் விருது மகிழ்ச்சி அடைகிறது Easy 24 News கிருபா கிருஷான் அவர்களின் வளர்ச்சி வேகம்
ஒளிவேகம் ஒலிவேகம் அதையும்விட
அதிவேகமாக இருப்பதை தினம் அவர் பதிவு செய்யும்
செய்திப் பதிவுகள் செவ்வி தருகின்றன
பூமி தன்னைத் தான் சுற்றிவலம்வர எடுப்பது 24 மணி நேரம்
ஆனால் இந்த ஊடகப் பறவை அதே அளவு நேரத்தில்
உலகவலம் சென்று செய்திகளை சேகரித்து வருகிறதே
இந்த இளம் ஊடகவியலாளனின்
உழைப்பின் உத்வேகம் கண்டு
தமிழினம் பெருமை கொள்கிறது
இது ஆரம்பம் தொடர்ந்து பல விருதுகள் தேடிவரும்
உயிரும் மெய்யும் மட்டும் கலந்திருக்கும்
தமிழ் எழுத்துக்களைப் போல்
நான் எழுதும் கருத்துக்களிலும்
உண்மைத் தன்மை உயிர்ப்புடன் கலந்திருக்கும்
நாளைய உண்மையை இன்றே பதிவு செய்கிறேன்
உலகம் ஒருநாள் இந்த ஊடகவியலாளனை
இனம்கண்டு வாழ்த்தி வரவேற்கும்!
Kalarajan Veera