இன்னிக்குத் தோனி டீமும் கோலி டீமும் மோதப்போகுது. சி.எஸ்.கே ஃபேன்ஸ் மைண்ட்வாய்ஸ்ல `10 வருஷங்களா ஒரு கப் ஜெயிக்கல. நீங்களா ஜெயிக்கப்போறீங்க?’னும், ஆர்சிபி ஃபேன்ஸ் மைண்டல `சார், என் சேவல் பந்தயம் அடிக்கும் சார்’னு `ஆடுகளம்’ தனுஷ் மாதிரியும் மல்லுக்கட்ட, கூலா இன்னோரு குரூப் `பாஸ், உங்க டீம்ல 5 பேர் நல்லா ஆடட்டும். இவங்க டீம்ல 6 பேர் நல்லா ஆடட்டும். குறிப்பா, வாட்சனும் கோலியும் நல்லா விளையாடியே ஆகணும்’னு சொல்லிட்டிருக்காங்க. #CSKvRCB
இந்த மூணாவது குரூப் ஃபேன்ஸ்தான் ஃபேன்டசி லீக் ஆடுற ஃபேன்ஸ். ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளத்திலயே ஃபேன்டசி லீக் ஆட முடியும். இதுக்கு செய்யவேண்டியதெல்லாம் டெய்லி காலையில வந்ததும், ஒரு டீம் செலெக்ட் பண்ணிவைக்கணும். இதுக்கு நிறையா ரூல்ஸ் இருக்கு.
1. தொடருக்கான டீம், தினசரி ஆட்டத்துக்கான டீம்னு இரண்டு டீம் செலெக்ட் பண்ணணும்.
2. தொடருக்கான டீம்ல, அணி வீரர்களை 75 முறை மாற்றியமைக்க முடியும். எல்லா டீம்ல இருந்தும் கலவையா அன்றைய ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி டீம் செட் பண்ணணும்.
3. பவர் பிளேயர் செட் பண்ணா அந்த பிளேயரோட ஆட்டத்துக்கு ஏற்ற மாதிரி கிடைக்கிற பாயின்ட்ஸ் டபுளா கிடைக்கும். பவர் பிளேயரை ரெண்டு இன்னிங்ஸுக்கும் தனித்தனியா செட் பண்ண முடியும்.
4. விக்கெட் எடுத்தா 20 பாயின்ட்ஸ், ஒவ்வொரு 25 ரன்னும் போனஸ் பாயின்ட்ஸ், கேட்ச் புடிச்சா 10 பாயின்ட்ஸ்னு புள்ளிகள் எகிறும்.
5. இதை, தனிநபராகவும் உங்களுக்குள்ளயே ஒரு லீக் டீம் உருவாக்கியும் ஆட முடியும்.
6. ஒரு டீம்ல இருந்து அதிகபட்சம் 6 வீரர்கள்தாம் இடம் பிடிக்கணும். 4 பேட்ஸ்மேன், 3 பெளலர், 1 கீப்பர், 3 ஆல்ரவுண்டர் நிச்சயமா இருக்கணும். இதுல இந்திய அணிக்காக ஆடாத ஒரு வீரர் அன்கேப்டு வீரரா இருக்கணும். 4 வெளிநாட்டு வீரர்கள் இருக்கணும். இவங்களுக்கெல்லாம் ஐபிஎல் ஒரு விலை நிர்ணயித்திருக்கும். இவர்களோட மொத்த பட்ஜெட் 10 மில்லியனைத் தாண்டக் கூடாது.
சரி, ரூல்ஸ்லாம் இருக்கட்டும் இதுல என்ன சுவாரஸ்யம்னு பார்ப்போம்…
இன்னிக்கு நடக்கிற ஆர்சிபி – சி.எஸ்.கே மேட்ச்சுல ஆர்சிபி டீமுக்காக கோலி, டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், உமேஷ்யாதவ், மன்தீப் சிங்கையும், சி.எஸ்.கே டீமுக்காக வாட்சன், தோனி, ப்ராவோ, ரெய்னா, தீபக் சஹார், டூப்ளெஸிஸையும் ஒருத்தர் டீம்ல எடுத்திருந்தா, அவர் மனநிலையில இந்த கேம் எப்படி இருக்கும்னா…
தீபக் சஹார், உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ப்ராவோ, வாட்சன் இவங்க ஓவர்ல ரன்னு அவ்வளவா போகக் கூடாது. அதேசமயம் விக்கெட் இவங்களுக்குத்தான் விழணும். கேட்சும் இவங்க இருக்கிற ஏரியாவுக்குத்தான் வரணும்,
சி.எஸ்.கே-வோ, ஆர்சிபி-யோ கோலி, ஏபிடி, தோனி, வாட்சன், மன்தீப், ப்ராவோ, டூப்ளேஸிஸ் மட்டும்தான் அதிக ரன் அடிக்கணும். அதுவும் மேல உள்ளவங்க ஓவர்ல அடிக்கக் கூடாது. ஒருவேளை கோலி அவுட் ஆகணும்னாலும் அது தீபக் சஹார் ஓவர்லயா இருக்கணும். அதே மாதிரி தோனி உமேஷ் ஓவர்லதான் அவுட் ஆகணும்னு கால்குலேட்டரோடுதான் சுத்துவாங்க.
இந்த கால்குலேஷன் கேட்டா, உங்களுக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்தும். ஆனா, இதுக்குப் பின்னாடி பெரிய உத்திகள், சரியான கணிப்பு இதெல்லாம் தேவைப்படும். தோனியைவிட சரியா டீம் செட் பண்ண முடியும்னு சொல்ற அளவுக்கு இந்தப் போட்டிகளைச் சிலர் சரியா கணிப்பாங்க. யாருமே எதிர்பார்க்காத அன்னிக்கு, தீபக் சஹார பவர் பிளேயரா போட்டு பாயின்ட்ஸ் அள்ளினவங்க. கெயில்லாம் வேஸ்ட்டுனு சொல்லி டீம்ல எடுக்கமாவிட்டு சதம் அடிச்சு டாப் பாயின்ட்ஸ்ல இருந்தப்ப `அவசரப்பட்டுட்டோமோ!’னு ஃபீல் பண்ணவங்கனு ஃபேன்டசி லீக் பரிதாபங்கள் ஏராளம்.
ஆகமொத்தத்துல, நாம செட் பண்ண டீம் நல்லா பர்ஃபார்ம் பண்ணா அன்னிக்கு நம்ம காட்டுல மழை. இல்லைன்னா அடுத்த மேட்ச்சுக்கு உத்திகளை மாற்றி அமைக்கணும். ஆர்சிபி – சி.எஸ்.கே ஃபேனா இல்லாம ஃபேன்டசி லீக் ஃபேனா ஒருத்தர் இருந்தா, கோலி – தோனி ரெண்டு பேருமே ஜெயிக்கணும்னுதான் மேட்ச் பார்க்க ஆரம்ப்பிப்பார். இந்த ஒரு மேட்ச் மட்டுமல்ல பாஸ், 67 மேட்ச்களையும் இப்படித்தான் பார்ப்பாங்க.
சரி, இன்னிக்கு உங்க பவர் பிளேயர் யாருனு கமென்ட்ல சொல்லுங்க பார்ப்போம்..!