CNE குறைபாடுடையவர்களிற்கு இலவச அனுமதி வழங்குவதை நிறுத்துகின்றது.
கனடிய தேசிய பொருட்காட்சியகம் இந்த வருடம் ஊனமுற்றவர்களிற்கு இலவசமாக அனுமதி வழங்க மாட்டாதென அறிவித்துள்ளது.
இக்கண்காட்சி ஆகஸ்ட மாதம் 19-முதல் செப்ரம்பர் 5-வரை இடம்பெறும்.
கடந்த வருடம் தான் CNE சென்ற போது தன்னால் எந்த சவாரிகளிலும் செல்ல முடியவில்லை என ஒரு பெண் தெரிவித்தார். தன்னால் சுற்றி வர நடக்க மட்டுமே முடிந்ததெனவும் கூறினார். எந்தவொரு செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாதிருந்த நிலையிலும் தன்னால் பல மணித்தியாலங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடிந்ததெனவும் தெரிவித்தார்.ஆனால் CNE இலவச அனுமதி கொள்கையை முடிவிற்கு கொண்டுவர தீர்மானித்தது தனக்கு கோபத்தை உண்டாக்கியதென கூறினார்.