cmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது. cmr வானொலி அண்மைக்காலமாக cmr வானொலியும் cmrtv என்ற வீடியோ தொலைக்காட்சியும் சேர்ந்து சிறப்பான கலைனர்களை அடையாளம் கண்டு அவர்களை cmr வானொலி நிலையத்திற்கு அழைத்து அவர்களுடன் சிறப்பான நேர்காணலை ஏற்படுத்தி கலையை வளர்ப்பதில் அளப்பரிய சேவையினை ஆற்றிவருகின்றது.
அந்தவகையில் இன்று cmr வானொலியின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் சிறப்பு தேர்ச்சிபெற்ற நேர்காணல் வித்தகருமான ராம் பிரஷன் அவர்கள் ஸ்ரீமதி பரத கலைவித்தகர் லலிதாஞ்சலி கதிர்காமர் மற்றும் தென் இந்திய பின்னணிப் பாடகருமான சத்தியபிரகாஷ் அவர்களுடன் ஓர் சிறப்பான நேர்காணலை தயாரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தனர். தொலைக்காட்சியின் பொறுப்பினை வானொலியின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் தொழில் நுட்ப கலைனருமான கமல்பாரதி அவர்கள் பதிவுகளை சிறப்பான முறையில் பதிவேற்றிக்கொண்டிருப்பதனை அவதானித்தவண்ணம் இருந்தேன். ராம் அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான கேள்விக்கணைகளை தொடுத்து அவர்களிடம் இருந்து முக்கியமான சுவராசியமான தகவல்களை சேகரித்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நேர்காணல் மிகவிரைவில் கலைச்சங்கமம் என்ற நிகழ்வில் கேட்டு ரசிக்க முடியும் என்பதினை சந்தோசம் கலந்த மகிழ்ச்சியில் அறியத்தருகின்றோம். வீடியோ பதிவினை cmr இன் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என்பதினையும் அறியத்தருகின்றோம்.
Langes, FCPA, FCGA