கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை ஆகியோரைத் தெரிவு செய்யும் உள்ளகத் தேர்தல் நேற்று 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மதியம் வரை நடைபெற்றது.
தலைவர் உட்பட ஒன்பது பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வெளியான போதிலும் தலைவர் மற்றும் மூன்று இயக்குனர்களுக்கு மாத்திரமே அன்று தேர்தல் நடத்தப்பெற்றது . ஏனைய 5 பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக முன்னரேயே அறிவிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராக சட்டத்தரணி வீனா தேவதாஸ் அவர்களும்இயக்குனர்களாக Christine Seevaratnam Poorany Sornabala. Gowthami Thanancheyan ஆகியோரும் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னர் தொடர்ச்சியாக மூன்று பதவிக் காலங்களுக்கு தலைவராகப் பதவி வகித்த திரு சாந்தா பஞ்சலிங்கத்தின் சேவைகளுக்காக அனைவரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
செய்தியும் படங்களும்; சத்தியன்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]