பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தருமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்த அழைப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மேதினத்தன்று முல்லிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக இவரை சி.ஐ.டி. யினர் அழைத்திருந்தனர்.
வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு எட்டு மணி நேரம் எடுப்பதனால், தனக்கு அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது என அவர் சி.ஐ.டி. யிற்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
தம்மிடம் வாக்கு மூலம் பெறவேண்டுமாக இருந்தால், வல்வெட்டித்துறைக்கு வருமாறும் அவர் சி.ஐ.டி. யினரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.