இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்தின் கூற்றுப்படி, எதிர்வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் அதிக கோவிட் தொற்றாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அறிகுறியற்றவர்கள், உடனடியாக தங்கள் பகுதி பொது சுகாதார அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டு, தம்மை வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
ஒரு பொது சுகாதார அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரி நோயாளியுடன் தொடர்பு கொள்ளும் போது நோயாளிக்கு ஒரு தெளிவான தொலைபேசி இணைப்பு, ஒரு மொபைல் சாதனம் இருக்கிறதா? என்று ஆராய்வார்கள்.
இந்த விடயங்கள், சரியென உறுதிப்படுத்தப்பட்டால், நோயாளி வீட்டிலேயே தனிமைப்படுத்த ஒப்புதல் வழங்கப்படும்.
எந்த நேரத்திலும், நோயாளிக்கு அறிகுறிகள் தோன்றினால், அவர்கள் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
______________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news